காதல் சொல்ல வந்தேன்
வெகு காலம் முடங்கி கிடந்த
என் இதயம்
இன்று ஏனோ
விண்னை முட்டும் தூரத்திற்கு
பறந்து செல்ல ஆசை கொள்கிறது!
காரணம்,
மூடி வைத்திருந்த
உன் பூ மூகம் கண்டதினால்!
கண்டதும்
காதல் கொண்டதினால்!
தொலைந்த இடத்திலேயே
மீண்டும் ஒருமுறை
தொலையச் சொல்கிறது
என் மனம்!
தொலைவதற்கு நான் தயார்
என்னை தேடி தருவதற்கு
நீ தயாரா பெண்ணே?
நான் மீண்டும்
ஒரு காதல் கதை எழுத
நீ உன் மனம் தருவாயா கண்னே?
உன்னோடு பேசி உரையாட
இதழ்கள் துடிக்கின்றது...
நீ மொளனமாய் இருப்பது ஏனடி?
உன்னோடு ஒட்டி உறவாட
மனம் ஏங்குகின்றது...
நீ ஒதுங்கி ஒட நினைப்பது ஏனடி?
உன்னோடு என் உயிர் சேர
தவிக்கின்றது...
நீ தயங்கி நிற்பது ஏனடி?
பதில் சொல் அன்பே
இந்த ஒருதலை காதலனுக்கு,
❤சேக் உதுமான்❤