தோனி - அத்தியாயம் 1
அப்போ ஏழாவது படிச்ச சமயம் டிராவிட்விக்கெட் கீப்பரா இருந்தப்ப தினேஷ் கார்த்திக் உள்ள வராரு. முதல் ஒருநாள் போட்டியில் மிக அருமையான ஸ்டெம்பிங் பண்ணுறாரு. ஆனா, பேட்டிங் சொல்லும்படியா இல்லை. எதுக்கு இவரை கொண்டு வந்தாங்க பேசாம டிராவிட் இருந்தா இன்னொரு பேட்ஸ்மேன் கிடைச்சிருப்பான்னு தோனுது.
மறுபடியும் பங்களாதேஷ் தொடர் வருது. தோனி இறங்குறான். அவரு தலைமுடியும் ஆளையும் பார்த்ததும் எதுக்குடா இவனை கொண்டு வந்தாங்கன்னு திட்டிதான் பார்க்க ஆரம்பிச்சேன். முதல் பந்து எதிர்கொண்டு ரன் அவுட். ஓடவே தெரியாத இவனை எதுக்குடா கொண்டு வந்தாங்கன்னு திட்டிட்டு மேட்ச் பார்த்து முடிச்சாச்சு. அப்போல்லாம் பங்களாதேஷ் கூட விளையாடுற மேட்ச் எல்லாம் மதிக்கிறதே இல்லை
அந்த தொடர் முழுவதும் வாய்ப்பு கிடைச்சும் மனுசன் சொல்லிக்கிற மாதிரி விளையாடலை. திரும்பவும் பாகிஸ்தான் தொடர்ல வாய்ப்பு கிடைக்குது. அப்பாவும் தோனி மேல மதிப்போ, நம்பிக்கையோ இல்லை. திரும்பவும் தோனி முதல் மேட்ச்ல சொதப்புறாரு. இந்த இடத்துல கங்குலி பத்தி சொல்லியே ஆகணும். ஒருத்தன் தொடர்ந்து சொதப்புறப்ப அவன் மேல நம்பிக்கை வச்சு அவனுக்கு தன்னோட வாய்ப்பை கொடுக்குறதுக்குலாம் ரொம்ப பெரிய மனசு வேணும். தாதா, தாதா தான் தோனி வெளுத்து கட்டுறான். பொதுவா சேவாக் அடிச்சே பார்த்த எனக்கு அதுலாம் புதுசு. என்னடா இவன் பேய் அடி அடிக்குறானு தோனுச்சு. செஞ்சுரி முடிச்சதும், தலைமுடியை சிலுப்புனான் பாரு. மரண மாஸு. அங்க இருந்து அவனோட அத்தியாயம் தொடங்குது.
தொடர்ந்து கங்குலி வாய்ப்பு கொடுக்குறதும் தோனி அப்பப்ப அதை சரியாய் பயன்படுத்திக்கிறதுமா ஒவ்வொரு மேட்சும் கடந்து போயிட்டே இருக்கு, இடையில கங்குலி-சேப்பல் பிரச்சனையில் கங்குலி கேப்டன் வாய்ப்பு பறிபோகுது. இலங்கை தொடருக்கு டிராவிட் கேப்டனா வராரு.
கங்குலி இல்லாத நிலையில அந்த தொடர்ல தோனி ஓப்பனிங்ல இருந்து எல்லா பொசிஷனையும் மாத்துறாங்க. சொல்லிக்கிற மாதிரி பெரிய இன்னிங்ஸ் இல்லை. அப்போ எல்லாம் ஒரு 50 ரன் அடிச்சாலே இன்னும் ஒரு 20 மேட்ச் விளையாடலாம். நம்ம ஆளு 148 அதுவும் பாகிஸ்தானுக்கு எதிரா அடிச்சதுக்கு அப்புறம் கேக்கவா வேணும். ஆடிட்டே இருக்கலாம்.
ஜெய்ப்பூர்ல நடந்த மேட்ச்ல இருந்து அவனோட இரண்டாவது அத்தியாயம் தொடங்குது. இப்போ எல்லாம் சிக்ஸ் அடிச்சா பெரிய விஷயமா தெரியல. எனக்குலாம் அப்போ சிக்ஸ்னாலே சேவாக் அப்புறம் கங்குலி தான். தோனி அப்போ விளையாண்ட விதம்லாம் வேற லெவல் ஆட்டம். ஒவ்வொரு பந்தா பறக்குது. அந்த ஹெலிகாப்டர் ஷாட்லாம் தமிழ் படத்துல வர மாஸான பி.ஜி.எம் பாட்டோட நினச்சு பார்த்தா அவ்ளோ கெத்து.
அவன் அன்னைக்கு அடிச்ச அடியில அன்வர் ரெக்கார்டுலாம் எம்மாத்திரம்? த்த்த்தா 200 ரன்ன தாண்டி போயிட்டே இருந்துருப்பான். அந்த நாள்ல இருந்து தோனினா சிக்ஸ்ங்குற எண்ணம் மட்டும் தான்.
மூன்றாவது அத்தியாயம் பாகிஸ்தான்ல இருந்து மீண்டும் தொடங்குது- நாளைக்கு எழுதுவோம்