விட்டுக் கொடுக்கறேன்

இரு சக்கர வண்டியில்
முன்னாடி உட்கார்ந்து செல்வது
குட்டிப்பெண்ணிற்கு பிடித்தமான ஒன்று..
ஆனால் எப்போதுமே என்னை கலாய்ப்பாள்..
சைக்கிள் கூட நம்ம வண்டிய முந்திப்போகுது என்று...
அதெல்லாம் முந்தல்ல
நான் தான் விட்டுக்கொடுக்கறேன்..
எனச் சொன்னால்..
வண்டிக்கு மட்டும் காது இருந்துச்சுனா
நீங்க சொல்றது கேட்டு இருக்கும்..
வண்டிக்கு மட்டும் குரல் இருந்துச்சுனா
நீங்க சொல்றது பொய்யினு சொல்லி இருக்கும்...
வண்டிக்கு மட்டும் உயிர் இருந்துச்சுனா
அப்படியே ஓடாம நின்றிருக்கும்.. என்கிறாள்

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (13-Jul-19, 12:58 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 337

மேலே