துவண்டது போதும் துள்ளி எழு
என் தோழனே
இருட்டு அறைக்குள்ளிருந்து
சாளரம் வழியே
சாலையை எட்டிப் பார்!
வெகு தொலைவில்
வெண்மைப் புள்ளிகளாய்
வெளிச்சக் கீற்றுகள் - அவை ஒளிப்பிரளமாய் உருவெடுத்து
விடியலைத் தொடும் தூரம்
வெகு தொலைவிலில்லை.
துவண்டது போதும் துள்ளி எழு!