காரணமாகக் குறிப்பிடுவர்

எனது நன்பர் ஒருநாள்
தனது வீட்டில்
உணவருந்த அழைத்தார்
நானும் சென்றேன்

வரவேற்ற கையோடு
உங்களுக்கு என்ன பிடிக்கும்?
என்று நண்பரின் மனைவி
கேட்டாள்

நான் அதற்கு
நண்பருக்கு என்ன பிடிக்குமோ
அதையே செய்யுங்கள்
அது போதும் என்றேன்

அதற்கு நண்பரின் மனைவி
அவர் எதைப் போட்டாலும்
தின்பார் என்றாள்—எனக்கு
திக் கென்றது

அவருக்கு சுவைக்கும் இரசனை
இல்லாததால்—எனக்கும்
சுவையோடு சமைக்கும் கலையும்
இல்லாமற்போனது என்றாள்

அலை நிறைந்த கடலில் தான்
அறிவும்,அநுபவமும் உள்ள
மாலுமிகள் பயணிப்பார்கள்
மக்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்

சிலர் தங்களது திறமைக்

குறைவுக்கு, அடுத்தவரின்
திறமைக் குறைவைக்
காரணமாகக் குறிப்பிடுவர்

எழுதியவர் : கோ. கணபதி. (14-Jul-19, 8:43 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 39

மேலே