வலியின் வெளிப்பாடு

செவ்வரளி /
வெண்ணரளி /
சேர்த்தெடுத்து /
கூடவே மஞ்சரளியும்/
பறித்தெடுத்து /
பூ மாலை கட்டிப்புட்டு /

மூவரளிப் பால் எடுத்தேன் /
வெள்ளிக்கிண்ணம் /
நிறைத்தெடுத்தேன் /
கன்னி என் கையாலே /
சிந்தும் புன்னகையோடு /
பருகக் கொடுக்கக் காத்திருக்குன் /

யாருக்கு ? எவருக்கு/
என்னும் கேள்வி /
உமக்குண்டு /
கேட்டுக்கோ /
உன் காதில் போட்டுக்கோ /

வேறு யாருக்கு /
நாக்கைப் புரட்டிப் போட்டு /
பொய்யுரைத்த படியே /
வாசல் படியேறி வரும் /
திருட்டு அரசியல் வாதிக்கு /

பூமாலையோடு பாலும்/
பாசம் போல் பாசாங்கு செய்து/
அருந்தச் சொல்லி/
அவசரமாய்க் கொடுத்திடவே /😜

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (20-Jul-19, 10:37 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 74

மேலே