ஏக்கம்

பசியில் இருப்பவனிடம்
ருசி தெரியாது!
ஏக்கம் நிறைந்தவனிடம்
நிம்மதி இருக்காது!
ஏக்கத்தை நீ ஏந்தினால்
உன்னை ஏற்றிவிடும் பாடையில்!
உன்னை நீ நேசி!
பிறரின்
நேசிப்புக்கும்
வாழ்த்துக்கும்
ஆறுதலுக்கும் ஏங்கி
உன்னை நீ ஏமாற்றாதே!
உன்னைப்போல் வேறெவராலும்
உன்னை நேசிக்க இயலாது!

எழுதியவர் : Sara Tamil (20-Jul-19, 12:47 pm)
Tanglish : aekkam
பார்வை : 396

மேலே