பிடிவாதக் குணமுண்டு தமிழனுக்கு

புரட்டப் புரட்ட புறப்பட்டு
வரும் புரட்சி வார்த்தைகள்/
அறுக்க அறுக்க முளைச்சே
வரும் அகங்காரச் சொற்கள்/


நீ விழியை உருட்டி உருட்டி
மிரட்டினாலு /செழித்து வளரும் /
அதட்டலைப் பிடித்து எழும்/
பதட்டத்தைக் கொடுத்தே மகிழும் /
பிதட்டலை விரும்பியே தொடும்/
மிரட்டலை வேராய் நடும் /


கடந்து வந்த பாதை
கற்றுக் கொடுத்த பாடமது /
கொதிக்கும் குருதியிலே பயமது ஏது/
குழிக்குள் போட்டாலும் வீரம் ஓயாது/
செடிக்கு நீர் விட்டாப் போல் /
வடிக்கும் வியர்வையிலும் பிறக்கும் துணிவது/


புளுவாகும் உடலுக்குள்ளே
உருவாகும் வீரமது/
துடித்து வாழும் இதயத்தைப்
பிடித்து வாழும் நினைவிலும் அது/
மடியும் நொடியிலும்
மண்டியிடுவதில்லை மனமது/


ஒவ்வொரு அணுக்களும் சொல்லி
அழும் தமிழனின் துயரமது /
வடியும் விழி நீரைச் சுட்டுவிரல்
கொண்டு துடைத்து விட்டு /
பிடிவாதக் குணத்தைப் பெருக்கும்
ஒவ்வொரு தமிழனின் எண்ணமது /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (20-Jul-19, 4:54 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 75

மேலே