லட்சுமிக்கு லஞ்சம்

'லட்சுமிக்கு லஞ்சம்'

தட்டில் தட்சனை ஐயருக்கு
மூலஸ்தான மூர்த்தியின் தரிசனம் எனக்கு;
பொட்டு தாலி அம்மனுக்கு
தாலி பலம் எனக்கு;
திருநங்கைகளுக்கு என்கையால் தர்மம்
என் குலம் வாழ வரம் எனக்கு ;
தெய்வத்திற்கே இலஞ்சமா
மனதில் குழப்பம் எனக்கு ;
காச பார்த்தா காந்தி தாத்தா
போல நான் சிரிக்க;
கொடுத்து வாங்கும் பண்பிற்கு
தெய்வம் மட்டும் விதி விலக்கா?!

~ நியதி ~

எழுதியவர் : நியதி (19-Jul-19, 9:07 pm)
பார்வை : 70

மேலே