நாள் நட்சத்திரம்
![](https://eluthu.com/images/loading.gif)
நல்லவை செய்ய நாள், நட்சத்திரம், நேரம் பார்க்கையிலே,
தேவை என்றபோது ஏதொன்றும் நினைப்பதில்லை,
பகுத்துப் பார்த்திடில் கருத்து வேறாகும்,
காலம் நினைத்திடில் காரியமே மேலாகும்.
சங்கடங்கள் அழுத்தி வர,
சாத்திரங்கள், சம்பிரதாயங்கள் பாரென்பார்,
நினைத்தவை நடந்து விட,
தனித்திறமை எனக்கு உண்டென்பார்.
நினைப்பவை மேலாக,
செயலெல்லாம் உயர்வாக,
பணிவு, அடக்கம் பழக்கமென்று கொள்வோருக்கு,
தனியொரு நாளும், நேரமும் வேண்டாம்,
எல்லா நாளும் அவருக்கு உயர்வே.