மல்லிகை மலர்கள்

மல்லிகை மலர்கள்!
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

உன் வெண்மை பார்த்து
உன் மணம் நுகர்ந்து
பலர் மகிழ்ந்தார்கள்
பலருக்கு அழகு வெண்மை
உன் நறுமணம் தெரிந்தது!

மல்லிகை மலரே
மணக்கும் செடியிலிருந்து
பறித்த மனிதர்களை
பார்த்து நீ வெறுக்கவில்லை
மணம் பரப்ப மறப்பதில்லை!

மணமும் அழகும்
மட்டும் மகிழ்ச்சி அல்ல
பிறர் மனம் மகிழ்விப்பதே
தன் மகிழ்ச்சியென உன்னால்
மனிதன் உணர்ந்தான்!


கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி , ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

எழுதியவர் : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய (19-Jul-19, 12:25 pm)
Tanglish : mallikai malarkal
பார்வை : 178

மேலே