உனை தேடிடும் ஜீவன்
வினாவாக நெளிகின்றேன்
விடை தேடி தவிக்கின்றேன்
மாயமாக மறைந்து
என்னை மயக்கத்தில்
ஆழ்த்தியது ஏன் ?
இளங்காலை பொழுதொன்று
உறக்கத்தில் விழித்தெழுமுன்
கனாவாக நீ வந்து
என் எதிரே நின்றாயே !
சலங்கை ஒலி கேட்டாலே
விழியிரண்டும் நடனமாடும்
உனை தேடிடும் திசையெங்கும்
உன் காற்கொலுசின் ஜதியதிலே
என் இதயத் துடிப்பு இடம் மாறுமோ ?
தென்றல் போல் என்னை கடந்து சென்றாய்
வருடியது வாடை காற்று என்றிருந்தேன்
வாட்டியதோ உன் நினைவு மட்டுமே !
மெல்லிய பூங்காற்றே
மணக்குது
உன் வாசம்
மனதிற்கு இதமாக !
என் விழிகளில் விழுந்தனயே
வருவாயா மீண்டும் இங்கே
வினாவாக நெளிகின்றேன்
விடை தேடி தவிக்கின்றேன் ...?

