இசையும் காதலும்
குரல் வளம் சற்று குறைவாயிருந்தாலும்
சுருதி சுத்தம், தாளக் கட்டுப்பாடு லயம்
இவை ஒருங்கே சேர்ந்தால் போதுமே
பாடகன் இசைமேதையாக உயர்ந்திட
காதலும் ஒரு இசை வேள்வியே ….
காதலனோ காதலியே இல்லை இருவருமே
அழகில் சற்று குறைந்தே தோன்றினாலும்
அவர்கள் இடையே பரவும் வேற்றுமை இன்மை
அதுவே அவர்கள் காதலுக்கு குரல்
அதைப் பிணைக்கும் பரஸ்பர அன்பு
அதுவே இதற்க்கு தாளம் சந்தேகம்
என்ற முள் தைக்க நிலைதான் இந்த
காதலுக்கு லயம் ……………..இவை இருக்க
இந்த காதலர் காதல் இசை மேதைகள்