காமம்

கோயிலில் அன்று திரள் திரளாய்
கூடியிருந்த மக்கள் எப்போது
சன்னதி திறக்கும் நாயகியின்
கடைக்கண் பார்வைக்கிடும் என்று
வழிமேல் விழிவைத்து காத்திருக்க
கூட்டத்தில் இருந்த அவன் பார்வையோ
கூட்டத்தில் அழகு நிலவாய்த் தெரிந்த
அவள் கடைக்கண் பார்வைக் கிட்டுமா
என்று வைத்தக் கண் வாங்காது தவமிருந்தான்
கட்டுக்கடங்கா இளமை என்பதா இச்செயலை …??
இறைவன் சன்னிதானத்தில் இருந்தும் இவன்
இறைவனைக் காண தவறியதேன் ….?
காமத்தின் தாக்கமும் இளமையில் போதையே …..

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (21-Jul-19, 2:51 pm)
Tanglish : kamam
பார்வை : 136

மேலே