வெற்றி

தோல்விதனை கண்டு அஞ்சினால்
தோரணை கொள்ள முடியுமா?
சோதனைகளை கடக்க வா,
சாதனைகளை புரிய வா!
காலமது உன் கையில்,
கலங்கிடாது வெல்ல வா!

கண்ணீர் கசியலாம்,
உன் மனபலம் கசங்கலாகாது!
முயற்சி செய்து பார்!
முயன்று தோற்றாலும்,
முனைப்பு கொள்!
வெற்றியை முழங்க செய்!

எழுதியவர் : Sara Tamil (21-Jul-19, 10:50 pm)
சேர்த்தது : Sara Tamil
Tanglish : vettri
பார்வை : 246

மேலே