மனைவி

தாயிக்கு நிகராக நமக்கு
கடவுள் அனுப்பியவலே மனைவி

சொந்தங்களை விட்டு வந்தவள்
சொர்க்கத்தை நமக்கு காட்டுவாள்

பந்தங்களை விட்டு வந்தவள்
பாசத்தை நமக்கு தருவாள்

துக்கங்களை மறைத்து வந்தவள்
துன்பங்களை தாங்கி கொள்வாள்

கண்ணீரை அடக்கி வந்தவள்
நம் கண்ணீரை துடைப்பாள்

ஆதரவை தேடி வந்தவள்
நமக்கு ஆதாரத்தை தருவாள்

எழுதியவர் : கணேசன் நயினார் (23-Jul-19, 12:20 am)
சேர்த்தது : Ganesan Nainar
Tanglish : manaivi
பார்வை : 12614

மேலே