ஓ நண்பனே

ஓ நண்பனே ஓ நண்பனே
நீ இல்லையேல் நான் இல்லையே
நீ வேண்டுமே என் வாழ்விலே
கண் நோக்குதே உன் வரவையே
எங்கே போனாய் என்னை விட்டு தனிமையில்
நானும் வரேன் செல்வோம் ரொம்ப தொலைவில்

நான் அழைத்த நொடியே
மறுக்காமல் வந்து நிற்பாய்
நான் கலங்கி நின்றால்
கண்ணீரை வந்து துடைப்பாய்

நான் நடக்கும் பாதையில்
நீயும் பின் தொடர்வாய்
நான் கூறும் வார்த்தையை
வேதமாக உரைப்பாய்

உன்னை தேடி தேடி பார்க்கிறேன்
எங்கேயும் உன்னை காணாமல்
சாகவும் துடிக்கிறேன்
என் அருகில் நீ இல்லாமல்

தந்தையை போல அதிகாரம்
செய்வாய்
தாயை போல அன்பை
காட்டுவாய்

பொய்யான பாசம் என்னிடம்
நீ கொண்டதில்லை
பகையை மட்டும் எப்போதும்
நீ காட்டியதில்லை

எழுதியவர் : Ganesan நயினார் (23-Jul-19, 12:18 am)
சேர்த்தது : Ganesan Nainar
Tanglish : o nanbane
பார்வை : 881

மேலே