நண்பா நீ கலங்காதே
அந்திவெயில் நேரம்
ஆசை குயில் கூவும்
தந்திரங்கள் இணையும்
வாழ்க்கை அங்கே ஒடும்
நண்பா நீ கலங்காதே
ஆசை எதிலும் வைக்காதே
எவரையும் நீ வெருக்காதே
தோல்வியை கண்டு நடுங்காதே
துயரம் உன்னை துரத்துமே
துன்பம் உன்னை வாட்டுமே
நினைவுகள் உன்னை எழுப்புமே
இதயமும் சேர்ந்து துடிக்குமே
பறவையை போல பறந்தாயே
பாசத்தை நீயும் இழந்தாயே
அன்பை தேடி அலைந்தாயே
தனிமையில் இன்று நின்றாயே
கடலில் வாழும் மீனும்
தண்ணீர் உள்ளவரை வாழும்
என் நெஞ்சில் வாழும் நீயும்
என் மூச்சு உள்ளவரை வாழும்