அம்மா அம்மா
அம்மா அம்மா
நீ தான் என் அம்மா
நானும் என்றும்
உன் பிள்ளை அம்மா.
காலம் நம்மை பிரித்தாளும்
உன் நினைவோ என்றும் பிரியாது
சோகம் என் கண்ணை மறைத்தாலும்
உன் பாசம் என்றும் மறையாது
அம்மா அம்மா
நீ தான் என் அம்மா
நானும் என்றும்
உன் பிள்ளை அம்மா.
தோளில் என்னை சுமந்தாயே
தூக்கத்தை எனக்கு தந்தாய்யே
மடியில் என்னை வைதாயே
மடிபாலை எனக்கு கொடுத்தாயே
அம்மா அம்மா
நீ தான் என் அம்மா
நானும் என்றும்
உன் பிள்ளை அம்மா.
தொட்டில் கட்டி உறங்க வைப்பாய்
குயில் தாலாட்டு நீயும் பாடிடுவாய்
தொட்டில் கீழே உறங்கி விடுவாய்
என் உயிரை என்றும் நீயே காப்பாய்
அம்மா அம்மா
நீ தான் என் அம்மா
நானும் என்றும்
உன் பிள்ளை அம்மா.