அப்பா எங்க போன
அப்பா நீ என்ன விட்டு எங்க போன
உன்ன பாக்காம பேசாம நொந்து போன
எதோ இருக்கிறேன்
என்னவோ வாழுறேன்
எனக்கு என்னவென்று புரியல
உன்னையும் நான் மதிக்கல
என்னையும் நீ வெருக்கல
எப்பவும் என்னை மட்டும் நீ அடிக்கல
சிக்கணமாய் இருந்து நீ
என்னையே வளர்த்தியே
சிக்கல்களில் இருந்து நீ
என்னையே காத்திய
பொக்கிஷமாய் என்னையும் வாழ வைத்தியே
உத்தமனாய் இருக்க நீ
எனக்கு கற்று கொடுத்தியே
உறவையும் நீயும் தான்
எனக்கு காட்டி கொடுத்தியே
தப்பை எல்லாம் எனக்கு புரியவைப்புயே
ஒரு போதும் என்னை நீ
அடிததில்லை
ஒரு நாளும் என்னை நீ
வெருத்ததில்லை
எதுக்காக என்னையும் மறந்து போனியே
தொட்டிலிலே நான் அழுத
ஞாபகம் இல்லயே
உன் கண்களிலே கண்ணீர
நான் பார்ததில்லையே
என்னையும் தவிக்க விட்டு போனியே
கனவுகள் பல உண்டு
இருப்பது உன் மனதிலே
நிறைவேறும் முன் ஏன்
புதைந்தாய் இந்த மண்ணிலே
சொர்க்கத்தை நோக்கியே
தொடரும் உன் பயணமே
நட்ட நடு காட்டிலே
என்னை தவிக்க விட்டு போணியே