காதலியே என்னை பாரடி

காதலியே என்னை பாரடி
பதிலை கொஞ்சம் கூரடி
உன்னையே சுற்றி வருவேனடி
உனக்காக உயிர் தருவேனடி

சித்திரமா உன்னை வரைந்தேன் அடி
சிதைக்காமல் உன்னை காப்பேன் அடி
புத்தகமாக உன்னை பாப்பேனடி
தினமும் அதிலே கண் விழிப்பேனடி

உன் கண்களை நான் ரசித்த நொடி
என் கண்களை நான் இழந்தேணடி
உன் புன்னகையை நான் ரசித்த நொடி
என் புன்னகையை நான் தொலைத்தேன் அடி

வெண்மேகங்களே சூழ்ந்தது போல
உன் மேனியும் அழகில் பொங்குத்தடி
பொட்டால்காட்டிலே விட்டவனை போல
நீ இல்லா என் வாழ்க்கை ஆனதடி
நான் உன்னை பார்த்த அடுத்த நொடி
நீ வந்து இணைத்தாய் என்னை தேடி
நிஜத்தில் காணும் உன் வரவை
கனவில் கண்டேனடி

நீ செல்லும் பாதையில் நான்
பயணிக்கிறேன் தினமும்
நீ சொல்லும் வார்த்தைக்காக
எங்குகிறேன் தினமும்
ஏற்பாயா என் காதலை என்ற
விடை அறியாமல்
உரக்கமில்லாமல்
உணவு இல்லாமல்
தவிக்கிறேன் ஒவ்வொரு நொடியும்

எழுதியவர் : கணேசன் நயினார் (23-Jul-19, 3:26 pm)
சேர்த்தது : Ganesan Nainar
பார்வை : 145

மேலே