விண்ணை தாண்டி வருவாயா
எங்கே நீ சென்றாய்
என் செல்ல கிளியே
எதிர் வீட்டு சிலையே
எப்போ நீ வருவாய்
என் பிஞ்சு நெஞ்சிலே
உன்னை தொட்டதும் இல்லை
உன்னை அனைத்ததும் இல்லை
எதோ உன் மீது மோகம்
உன் கருங்குளியினில்
உன் இருவிழிலினில்
என்னை ஒரு தலையாட்டும்
பொம்மை ஆக்கினாய்
உன் மூச்சு காற்றினை
நான் சுவாசிக்கிறேன்
என் மூச்சு உள்ளவரை
அதையே யாசிக்கிறேன்
வேண்டாம் வேண்டாம் என
நான் விலகினாலும்
விடாமல் துரத்தும்
உன் நினைவு
உன் விழி பார்வையில்
நான் இழப்பேன்
என் நினைவை
உன் பாசத்தின் உச்சதால்
நான் இழப்பேன்
என் உயிரையும்
உன் நினைவோடு
வாழ விரும்புகிறேன்
என் நினைவு இந்த மண்ணை
விட்டு போகும் வரை
வீண் ஆசை வைக்காதே
என்று கூறும் உன் வார்த்தையில் இருந்து
விண்ணைத்தாண்டி வருவாயா என்று
குரல் ஒலிக்கும் தருணத்தை
எதிர் நோக்கி காத்து கொண்டிருக்கிறேன்