எதிர் வீட்டு தோழி
என் செல்ல கிளியே
எதிர் வீட்டு சிலையே
உன்னை பார்க்கவே
தவம் கிடப்பேன்
விழியும் மூடாமல்
நீயோ என்னை பார்க்கிறாய்
நண்பனாக
நானோ உன்னை பார்க்கிறேன்
காதலியாக
இது தான் காதலால் வரும்
வலியோ
துடிக்கிறேன் தினமும்
இருட்டினில்
நடிக்கிறேன் தினமும்
வெளிச்சத்தில்
வலிக்கிறது என் இதயம்
உன்னிடம் நடிக்கும் போது
கிழிகிறது என் இதயம்
உன்னை நினைத்து
துடிக்கும் போது