தனிமை
என் தலையில் நான்
சூடியிருந்த மல்லிகைபூக்கள்
படுக்கையில் என் பாரம் தாங்காமல்
கசங்கி மடிந்து கூச்சல் போட்டு
என் தனிமையே எனக்கு உணர்த்தியது
சத்தமில்லாத ராத்திரிகளில
என் இதயத்துடிப்போ சத்தமிட்டு
என் தனிமையே சொல்லி சிரித்தது
தேங்கி வந்த கண்ணீரில்
ஜன்னலின் மறுபக்கம்
தெரிந்த முழுநிலவு மட்டுமே
மேகங்கள் மறைத்து விட்ட
நட்சத்திரங்களை ஏண்ணி
என்னை போலவே
தனிமையில் துடித்தது

