சீதாதேவி கரோடியா
சீதாதேவி கரோடியா..
நான் பார்த்து பார்த்து ரசித்த புனித பூமி இது..!!
தேவதைகள் போல் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் வலம் வரும் ஆசிரியைகள்..!!!
விழா விருந்தினர் அனைவரும்..
அதிர்ஷ்ட லஷ்மிகள் அறுவத்திமூவர் என மனம் நெகிழ பாராட்டும் பாக்கியம் பெற்ற கோவில் அது..!!!
கல்லூரி தொடங்கி
இன்று வேலைசெய்யும் அலுவலகம் வரை தோள் உயர்த்தி உள்ளத்தில் பெரும் அன்புடன் சொல்வேன்
நான் சீதாதேவி கரோடியா மாணவி என..!!
அத்தனை பிரியம் என் பள்ளியின் மேல்..!!
வீட்டின் கஷ்டங்களை மறக்க தாய் மடி தந்து தலை வருடிய இடம் அது..!!
ஒவ்வொரு ஆசிரியரிடமும்
ஒன்றொன்று பிடிக்கும் எனக்கு..!!!
கற்றுக்கொள்ளவும்
கடைபிடிக்கவும் *மிகச்சிறந்த* மனிதர்களை கொண்ட புண்ணிய பூமி அது..!!
என் அன்னையிடம் உணராத அன்பைக் கூட
என் பள்ளியில் உணர்ந்து நெகிழ்ந்து அழுதிருக்கிறேன்..!!
யாருமில்லாத வெறும் கட்டிடத்தைக் கூட
அரை மணி நின்று பார்த்தபடி அழுதிருக்கிறேன்..!!
யாரும் பேச இல்லாத நிலையில் கூட கட்டிடத்தை பார்த்துக் கொண்டு இருந்தபடியே அரவணைப்பையும் ஆறுதலையும் உணர்ந்திருக்கிறேன்..!!
அத்தனை பிடிக்கும்..!!
முன் பின் பேசி பழக்கம் இல்லையெனினும் பள்ளி ஆசிரியர்களை எதிரில் பார்க்க நேர்ந்தால்...
கடவுளே இறங்கி வந்து நேரில் "உனக்காய் நான் இருக்கிறேன்.." என அசரீரி சொல்வதாய் தோன்றும்
ஊமை தைரியம் பிறக்கும் எனக்கு..!!!
பாசம், பக்தி இரண்டையும் ஊட்டிய இடம் அது..!!
பாசம் மிகுந்து ஆதரவற்று பின் பக்தியானது..!!!
பள்ளி சீருடை பார்த்தாலே மட்டற்ற மகிழ்ச்சி கொள்வேன்..!!
இன்னமும் என் பள்ளியில் நுழைந்தால் யாரோ அரவணைப்பது போல் தோன்றும்..!!
அத்தனை உணர்வு பூர்வமாய் வாழ்ந்த இடம் அது..!!
இன்று மனம் பாரமாய்..!!
"நாராயணன்" என்ற ஒருத்தரின் இரு(ற)ப்பு..
இத்தனை பெரிய அளவிலான மன பாரங்களில் எங்களை ஆழ்த்தும் என நினைக்கவில்லை..!!
#தலைநிமிர்ந்து நடந்தே தான் பழக்கம் எங்களுக்கு..!!!
தலைகுனிந்து என்றும் நின்றதில்லை..!!
#கரம் குவித்து வரவேற்றுதான் பழக்கம் எங்களுக்கு..!!
கரம் கூப்பி மன்னிக்க விழைந்ததில்லை..!!
#நேர்கொண்ட பார்வையுடன் குழந்தைகளை மார்கொண்டு அணைத்து தான் பழக்கம் எங்களுக்கு..!!
வேர் ஒன்று இல்லாத
கார்கால மரம் போல்
ஆடிவீழ்ந்ததில்லை..!!
#மகிழ்ச்சியின் மறுஉருவாய் மதிகொண்டு பூமிதனை வென்றே பழக்கம் எங்களுக்கு..!!
இகழ்ச்சியின் நிழல் தீண்ட இருவேறு திசைகளில் வசைமொழிகள் கேட்டதில்லை..!!
பாசுரத்தின்படி..
(நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்)..
நலம் தரும் சொல்லான
நாராயணன் என்ற நாமத்துடன் நன்கு தான் இருந்தோம்..!!
நாராயணன் இல்லை..!!
நலம் வளமும் இல்லை..!!
வருவாய் வரதா..
வந்து வரம் தா..