எமனிடம் ஓர் வேண்டு கோள்

மரணத்தை எண்ணிக்
கலங்கலாமா?
மரணத்தைத் தள்ளி
வைக்க நம்மால் முடியுமா?
பிரமனே அறியாத ஒன்று /
எமனுக்கு அவை தொன்று/


இமனே நீ வென்று விடு/
உன்னோடு என்னைக்
கொண்டு சென்று விடு/
தொன்று என்று
நீ நினைத்தாலும் சரி/
பணி என்று நீ நினைத்தாலும் சரி/


பணிவுடன்
நான் கேட்கின்றேன்/
உன் பணியை
நீ சரியெனச் செய்து விடு/
என் ஆயுளை வென்று விடு/
பூவுலகில்
பூவையருக்கு இன்பமில்லை/
வின்னுலகிட்குக்
கொண்டு சென்று விடு/



ஆழ் மனதிலே
அள்ள முடியாக் கவலை/
ஆன்மாக்குள்ளும்
தாங்க முடியாதவாறு வலி/
வலி தீரவே என் இல்லத்தின்
வழி நோக்கி வந்து விடு/
பாசக்கயிறையும் கொண்டு வந்து விடு/



பதறுவார்கள் கதறுவார்கள் /
அதைக் கண்டும் காணாதது
போல் நின்று விடு/
கண்ணீர் வடிப்பார்கள் /
கூடிக் கூடி ஒப்பாரி வைப்பார்கள்/


தொண்டைக் குழி துடிக்கையிலே/
தொட்டுத் தொட்டுப் பார்ப்பார்கள்/
நெஞ்சம் கரையாதே வஞ்சக
உலகத்தில் என்னை நீடிக்க வைக்காதே/
இவை என் இறுதி ஆசையின் /
உறுதிமொழி என்பதை மறக்காதே/
என் மனுவை ஏற்றுக்க மறுக்காதே/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (27-Jul-19, 7:51 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 170

மேலே