கடவுள்

கடவுள் 🙏🏽

கடவுள் எதிரில் வந்தால்
என்ன கேட்பாய்?
கேள்வி கேட்பது ஒரு பக்கம் இருக்கட்டும்
கடவுள் எப்படி இருப்பார்
அவர் தோற்றம், அடையாளம் என்ன?
இப்படி கேள்வி கேட்டால் நான் எப்படி பதில் சொல்வது..
அது தான், உன் கேள்வியே தவறு.
அப்போது கடவுள் இல்லை என்கிறாய்? அப்படி தானே!
அவசர படாதே,
சரி, நான் உன்னை கேள்வி கேட்கட்டுமா?
கேள், தக்க பதில் சொல்வேன்.
அப்போது நீ சொல்லும் கடவுள் எந்த வடிவில் வருவார்?
நான் தினம் வணங்கும் வினாயகராக
அப்படியா, அப்போது முருகன், சிவன் , பெருமாள் இவர்கள் எல்லாம் யார்?
அவர்களும் கடவுள் தான்.
அப்போது கடவுள் ஒருவர் இல்லையா?
குழப்புகுறாய், இறைவன் ஒருவனே!
அப்போது, ஏன் இவ்வளவு கடவுள்கள்.
அவை, அவனுடைய அவதாரங்கள்.
ஏன் இத்தனை அவதாரம்?
அவதாரம் அத்தனையும் தாத்பரியங்கள், தத்துவங்கள்.
ஏன் ஒரே இறைவனாக தோன்றி தத்துவம் எடுத்து சொல்ல முடியாதா?
உன் கேள்விக்கு பதில் கூறுவது சற்று கடினம்.
இருந்தாலும், ஆண்டாண்டு காலமாக இருப்பதை மாற்ற முடியுமா?
மாற்ற முடியாது என்பது உன் பதில், அதில் சற்று மாறுபடுகிறேன்.
இத்தனை அவதார புருஷர்களாக அவர்களே உருவானார்களா ? இல்லை சான்றோர்கள் உருவாக்கினார்களா?
என்னை பொருத்தவரை
மனிதன் தனது வாழ்க்கையை போலவே தெய்வங்களையும் உருவாக்கியுள்ளான்.
அப்போது கடவுள் இல்லையா?
கடவுள் சுயம்பு என்பது பொய்யா?
மீண்டும், ஏன் அவசரபடுகிறாய்
கடவுள். வார்த்தையை நன்கு கவனி.
கட-உள்.
உள்கட... உள்கட...கடவுள்,
எப்போதும் நம்முள்ளே உள்ளார்.
அப்போது நீ கடவுளை நம்புகிறாய், அப்படி எடுத்து கொள்ளலாமா?
நான் கடவுளை இப்படி கூறுவேன் .
நீ சொல்வது போல் கடவுள் நேரில் வரமாட்டார்.
நல்ல சிந்தனை தான் கடவுள்.
அன்பு உள்ளம் தான் கடவுள்.
கருனை தான் கடவுள்.
உதவி கரம் தான் கடவுள்.
அறிய சேவை தான் கடவுள்.
ஆசை எங்கு இல்லையோ அங்கே இறைவன் நிச்சயம் குடியிருப்பான்.
உருவமற்றுவன், ஆனால் , அனைத்து ஜீவராசிகளுக்கு உயிருள்ள உருவம் கொடுப்பனே கடவுள்.
அன்பு தான் கடவுள்
உண்மை தான் கடவுள்.
- பாலு.

எழுதியவர் : பாலு (28-Jul-19, 8:11 am)
சேர்த்தது : balu
Tanglish : kadavul
பார்வை : 1612

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே