அக்காவிற்கு திருமண வாழ்த்து
உன் மனம் கவர்ந்த காதலனை
கரம் சேர்க்கும் கணவனாக ஏற்க போகும்
என் தங்க தமக்கையே ....
நீங்கள் இருவர் கண்ட கனவுகள் யாவும்
எங்கும் எதிலும் ஒருசேர நிறைவேற
நிலைத்து நிற்கும் காதலோடு வாழ
மருவீட்டின் மணமகளாய் சென்று
மருவீட்டாரின் மனம் கவர்ந்து
மாமியாரின் இன்னொரு மகளாக இருந்து காத்து
இல்லறம் சிறக்க மழலை செல்வங்களை பெற்று
இனிதே இன்புற்று வாழ
அன்புடன் வாழ்த்துகிறேன்....