அக்கா என்னும் பேருறவு

வீட்டின் மூத்த மகளாய் பிறந்து
தந்தையின் செல்ல மகளாய் வளர்ந்து
தாயின் அன்பு மகளாய் திகழ்ந்து
தங்கையின் முதல் தோழியாய் வாழ்ந்து
குடும்பத்தின் முழு செல்வமென நிறைந்தவளே
என்றும் உன்னை நான் அக்கா என்று அழைத்ததும் இல்லை
நீயோ மூத்தவள் என்ற அதிகாரத்தை என் மீது செலுத்தியதும் இல்லை
நான் அறியாமல் நீ அழுததும் இல்லை
உன்னை விட்டு நான் சிரித்தும் இல்லை
நாம் போடாத சண்டைகள் இல்லை
திட்டி தீர்க்காத வார்தைகள் இல்லை
நாம் பேசாமல் இருந்த நாட்களும் இல்லை
சேர்ந்து செய்த சேட்டைகளை சொல்லவும் நேரம் இல்லை
நாம் பகிந்து கொள்ளாத ரகசியங்கள் இல்லை
உன் இடத்தை நான் யாருக்கும் கொடுத்ததும் இல்லை
நீ மருவீடு சென்றால் உருவாகும் வெற்றிடத்தை நிரப்ப
உன்னை தவிர இனி இங்கு யாரும் வரப்போவதும் இல்லை
என்பதனை மனதில் நிறுத்தி மகிழ்ந்திரு....

எழுதியவர் : ஸ்டெல்லா ஜெய் (28-Jul-19, 10:18 am)
சேர்த்தது : ஸ்டெல்லா ஜெய்
பார்வை : 354

மேலே