துணிவோடு போராடு
விதைத்த விதைகள் திமிறி எழவில்லையெனில்... உயிரினங்களுக்கு வாழ்வென்பதே கிடையாது!! எல்லையில் எதிரிகளோடு வீரர்கள் தினம் தினம் போராடவில்லையெனில்..... சுதந்திர தூக்கம் யாவருக்கும் கிடையாது!! இறக்கையின் மகத்துவம் தெரியவில்லையெனில்... பறவைகள் வானத்தை வெல்ல முடியாது!! சிறுசேமிப்பின் அவசியம் அறியவில்லையெனில்... வாழ்வை செம்மையாக வாழ முடியாது!! மண் திரட்டல்கள் இல்லையெனில்...... மலைகள் என்பதே கிடையாது!! சிறுதுளிகள் யாவும் இணையவில்லையெனில்...... ஆழ்கடல்கள் புவியில் கிடையாது!! நச்சுக்காற்றில்உயிர்வளி இல்லையெனில்..... உயிரோட்டமே உலகில் கிடையாது!! மனவெழுச்சிகள் மானிடர்களுக்குள் இல்லையெனில்.... மகத்துவத்தோடு வாழ முடியாது!! எதிரிகளும் - ஏவல்களும் இல்லையெனில்.... வாழ்வில் எதிர்நிச்சல் போட முடியாது!! கைவிலங்கிடும் சட்டம் இல்லையெனில்.... சமத்துவத்தை பேணி பாதுகாக்க முடியாது!! காகிதத்தோடு பேனா சண்டையிடவில்லையெனில்..... எழுத்துக்களை இடம் அமர்த்த முடியாது!! அன்பும் - அறவணைப்பும் இல்லையெனில்.... தாய் - சேய் உறவு கிடையாது !! உண்மையே உலகின் நிலைப்பாடு என்றால்... பொய்மை நிலைத்திருக்க முடியாது!! போராட்டம் என்றொன்று இல்லையெனில்.... வெற்றி என்பதே கிடையாது!! ஆகையால், போராட்டத்தின் முதல்படியே வெற்றி என்பதனால் துணிவோடு போராடு!!! எட்டி நிற்கும் வெற்றியை தட்டிப்பறிக்க... கல்வி என்னும் ஆயுதத்தை கனிவோடு அறவனைத்து ஆயுள்வரை போராடு!! மண்ணிற்குள் உம்மை அனுமதிக்கும் வரை மகிழ்ச்சியோடு போராடு!!! ......