என்ன செய்தேன்
என்ன செய்தேன் என்னால் செய்ய முடிந்தவற்றால்?
என்ன செய்தேன் என் வாழ்க்கையுடன்?
என்ன செய்தேன் நான் கொண்ட துயரத்துடன்?
என்ன செய்தேன் என் வாழ்வில் கடந்த மகிழ்ச்சிகளுடன்?
என்ன செய்தேன் துடிக்கும் இதயத்துடன்,
பிறப்பு முதல் இறப்பு வரை?
என்ன செய்தேன் உன்னுடன் நான் தேக்கி வைத்த காதலால்?
என்ன செய்தேன் நான் பெற்ற தோல்விகளுடன்?
என்ன செய்தேன் நான் கண்ட தொடர் வெற்றிகளுடன்?
என்ன செய்தேன் நேரத்திற்குள் அடியெடுத்து வைத்து?
என்ன செய்தேன் இறப்பென்ற உடலின் முடிவுரையில்?
என்ன செய்தேன் மறுஉடல் நுழைதலில்?
என்ன செய்தேன் நான் என் போன்ற பலருடன்?
என்ன செய்தேன் நான் எதுவாக இருக்கிறேன் என்றறிந்து?
என்ன செய்தேன் பூக்களின் அர்த்தம் உணர்ந்து?
என்ன செய்தேன் ஆன்மாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட கிளர்ச்சியால்?
என்ன செய்தேன் என் கண்களில் கண்ணாடி அணிந்து?
என்ன செய்தேன் கோப்பையில் தேநீர் பருகி?
என்ன செய்தேன் என் கால்களில் காலணிகள் அணிந்து?
என்ன செய்தேன் விலையுயர்ந்த ஆப்பிள்களை தின்று?
என்ன செய்தேன் என் உடலை போர்த்திப் போர்த்திப் பாதுகாத்து?
என்ன செய்தேன் எல்லா வார்த்தைகளுடன்?
என்ன பயன்களை அவை எனக்கு வழங்கின?
அவை எல்லாம் பயனுள்ளவையாக இருக்கின்றனவா?
இது நகைச்சுவை அல்ல.
என்ன செய்தேன் எனது சுதந்திரத்தால்?
என்ன செய்தேன் எனது தனியுரிமைகளால்?
என்ன செய்தேன் நான் அமைதியின்றி கலகமடைந்து?
என்ன செய்தேன் என் உடலை உப்பச் செயது?
என்ன செய்தேன் என் வாழ்நாளை நீட்டிக்கப்பட்டதால்?
என்ன செய்வேன் நான் முடிவற்ற, குறிக்கோளற்ற நேரத்தில் மிதந்து கொண்டிருப்பதால்?
என்ன செய்வேன் என்னால் செய்ய முடிந்தவற்றால் நான் பெற்றவை கொண்டு?