அவள்

முல்லைக்கொடி இடையாள்
விரி செந்தாமரை முகத்தாள்
அன்னமென நடந்து வந்தாள்
சுட்டு சுடர்விழியால் என் மனதை
சுண்டி இழுத்து தன மனதில் வைத்து
என் இதயத்தில் தன்னைக் காண வந்தாளோ
கிடந்த என் மார்பில் வந்து வீழ்ந்து
என் இதயத்தில் காது வைத்து எதைக் கேட்டாளோ
ஓ அதில் தன் குரலைக் கேட்டு அதில் தான்
இருப்பது தெரிந்துக்கொண்டாளோ நங்கை அவள்
ஊர்ஜிதம் ஆனதோ நெஞ்சம் குளிர்ந்து
அவள் என்னை , நெஞ்சோடு நெஞ்சு இணைய
தன் செவ்விதழ்களை விரித்து அன்பு முத்தம்
இட்டாள்
என் இதழ்கள் மீதே அதில் இளந்தளிர் வெற்றிலை
மணம் நுகர்ந்தேன் நான் புரிந்துகொண்டேன்
மங்கை இவள் இதழ்களில் 'லிப்ஸ்டிக்' பூசவில்லை
அது இயற்கையிலேயே சிவந்த இதழ்கள்

கண் திறந்து பார்த்தேன் , தனிமையில் நான்
இரவில் ,நடு நிசியில் துயிலில் கனவு ஒன்று
இப்படி கண்டேன்...…..கனவில் வெற்றிலையின்
நறுமணம்...... எப்படி நுகர்ந்தேன் இன்றும் விளங்கா
புதிராய் என் மனதில் நினைத்தால் அதே மணம்
பரப்பி என் மனதைபித்தாகியதே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (28-Jul-19, 2:58 pm)
Tanglish : aval
பார்வை : 240

மேலே