காதல் வாழ்கின்றது
காதலர் அவர்கள்
அவர்கள் மனதில்
எந்த பேதமும் இல்லை
அதில் காதல் வெள்ளப்பெருக்கு
வேறொன்றும் இல்லை
காதலர் தம்பதியானார்
இறைவன் சன்னிதானத்தில்
ஏற்கா உற்றார் உறவினர் யாரும் இல்லாது
சில உற்ற நண்பர்கள் மட்டும் சூழ
அந்தோ பாவிகள் இவர்களை
வாழ விடவில்லை, கொன்று
இவர்கள் காதலுக்கு முடிவு இதுவே
என்று மார்தட்டி...….
இதோ இவர்கள் கல்லறையில்
இவர்கள் வாழ்ந்த இன்ப காலத்தின்
எதிரொலி, அவர்கள் பேசிய காதல் பேச்சு
பரிமாறிய சிரிப்புக்கு.. அங்கு
போவோர் வருவோர் காதில் கேட்குதே
இவர்கள் மாய்ந்தார் ? காதல் மாய்க்கமுடியவில்லை
குறுகிய மனப்பான்மை வீணர்களால் !