இயற்கை

மார்கழி மாதம் பனிமூடிய வேளை
அதி காலைப்பொழுது , துயில் நீங்கி
வெளிவந்த என் கண்ணிற்கு
வானில் தெரிந்தது ஓர் திட்டாய்த்
தெரிந்த கருநீல கார்மேகம்
அதில் கார்மேக கண்ணனே காட்சிதந்தான்
பரவசம் அடைந்து நான் என்னையே மறந்தேன்
கண்ணனோடு பேசினேன், 'கண்ணா
நீல வண்ணனே உந்தன் குழல் எங்கே
அதில் கீதம் இசைப்பாயா எனக்கு
என்னுளத்தில் நீயே நிறைந்திருக்க
என்றேன்', அதற்கவன்
அதோ கேட்குதே என் குழல் இசை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (28-Jul-19, 5:07 pm)
Tanglish : iyarkai
பார்வை : 784

மேலே