சலங்கைஒலி
வேண்டாம் வேண்டாம் என
கதறும்
மேடையேறி நிற்கும் வரை
அபிநயத்தோடு என் ஆட்டம்
தொடங்க
என்னைப் போல தன்னை
மறந்து
ஜதியோடு இணைந்துவிடும்
ஆட்டம் முடியும்வரை
ஆட்டம் முடிந்த கைய்யோடு
கலையென ரசிக்க வந்த
காமுகரின் கண்கள் என்
அங்கங்களில் மேய்ந்ததை பற்றி
புலம்பியபடியே என்னோடு வரும்
காலில் இருந்து கழட்டும் வரை
என் கால்சலங்கை
கழட்டியப்பின் அமைதியாக
பார்க்கும்
அதன் அத்தனை கண்களிலும்
ஒருகேள்வி மட்டும் நிறைந்திருக்கும்