காதலியின் காதலன்
இரும்பு இதயத்தை இலகுவான இனிப்பாய் மாற்றிய,
இளவரசனின் இனியவளான இளவரசியே!
உன் பண்பாலும்,அன்பாலும் என் அறிவிற்க்கும்,மனதிற்க்கும்
இடையில் இருந்த இரும்பு பாலத்தை உடைத்து
உடையவளின் உரிமைக் கோட்டைக் கட்டி ,
பரிசுத்த பாலாலும் தேனாலும் திருமுழக்கு செய்த உன்னவன்.
தான் மானுடன் என்னும் அறிவுமதி மழங்கி ஆட்டம் ஆராவரத்தோடு
பாம்பாக உன் பாதத்தைச் சுற்றினேன்.
அறிவழகியே !அன்பின் அன்பரசியே!
உன் பேரன்பினால்
அன்பரசனாக ஆனேன் ,ஆளக்கப்படேன்,
ஆதலால் என்னவோ என்னவளே
நேரத்திற்க்கு நேர்மையாய் இருந்த நேசவன்
உன்னை நினைக்கும் நேரமெல்லாம்
காலத்தை கடத்தும் கள்வனாய்,கற்சிலையாய் மாறினேன்.
கல்லூரி கனாகாலத்தில் கதைப் பேசிக் களிப்படைய வேண்டியவன்,
காதல் களிப்பில் கவிதைச் சிற்ப்பியாய் மாறினேன்.
கலியுகத்தின் காதலனாய் கணவனாய் காலம் கடக்க கனவு காண்கிறேன்
இப்படிக்கு
காதலியின் காதலன்