வாணூர்தி ஓட்டம்

பாரத தேசத்து
பண்ணாடைகளே
பொன்னாடை
போர்த்தி மண் ஆளும்
ஆட்டு மந்தையர்களே ...../


உங்களது கண்களால்
பாருங்கடா உங்களது
ஆட்சியின் கொடுரக்
காட்சியை மனிதம்
இழந்த மடையர்களே ...../

மனிதன் என்னும்
போர்வையில் உலா
வரும் மண்டுகளே ..../

அரக்க குணம் இன்னும்
உங்களிடம் உறங்கிக்
கொண்டு இருக்கின்றது
என்று உலக மக்கள் குமுறுவதைக்
காது கொடுத்துக் கேளுங்களேன் .../

வெட்கம் கெட்ட அரசு
எதற்கு என்று துக்கம்
கொண்டு சத்தமிட்டு
பலர் உங்களை திட்டித்
தீர்ப்பதை பாருங்களேன் ..../

ஆண் மகன் என்னும்
தோற்றம் கொண்டு
மன நலம் இல்லாத
ஒருத்தனை பலி கொடுத்த
பாவிகளே பரதேசி நாய்களே
பதுங்கியே இருங்கடா பதற
வைக்க எவனாவது வருவது
உறுதியொடா நாதாரிகளே .../

வாணூர்தி ஓட்டம் மாடி
வீட்டில் ஆட்டம் போட்டு
வாழும் கொள்ளையர்களுக்கு
தெரியுமா ஏழையின் பசியும்
வறுமையின் வலியும் ..../😢😡

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (29-Jul-19, 7:55 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 60

மேலே