செல்லிடப்பேசி MOBILE
ஏய் நீ என் கை குழந்தைதானோ
என் கையைவிட்டு இறங்க மறுக்கிறாய்
நீ செல்லமாய் என் கன்னத்தில் முத்தமிட்டு
என் காதுகளை கடித்து உரசுவதால்தான்
உன்னை செல்லிடப்பேசி என்று அழைக்கிறார்களோ
என் கையின் ஆறாம் விரலே
என் ஐந்து விரல்களுக்கு இடையில்
நீ மட்டுமே ஒரு புது உணர்வினை தருகிறாய்
என் ஐ விரல் இதழ்களின் காயமெல்லாம்
உன்னை முத்தம் யிட்டதுதானோ
இருந்த இடத்தில இருந்துகொண்டே
இலக்கியங்கள் படிக்கிறேன்
இமயத்தின் முகவரியைக்கூட
உந்தன் இணையத்தில் காண்கிறேன்
இருட்டினில் பயம் அறியாமல்
உன்னைக்கொண்டே வெளிச்சங்கள் எழுப்புறேன்
உன்னால் எத்துணை பயன்கள்
தொலைதூர தொடர்புகள் கூட
எந்தன் கைதேடி வருகிறதே