பூவுக்கு அதுதானே வரம்

பூவே பூவே உன் புன்னகை எங்கே..?
காதல் புயலடித்துப் போனதோ ...?
சோகப் புயல் புரட்டிப் போட்டதோ.... ?
கொடும் கோபம் கடும் சொற்கள்.... ?
கடுகு போல் தெறிக்கின்றதே ....?
பூவே பூவே கரு வண்டு சுற்ற வில்லையோ ...?
கரு மேகம் மழை நீர் கொட்ட வில்லையோ ...?
காத்திருக்கும் நேரத்திலே
சேர்த்தணைக்க கரம் நீளவில்லையோ....?
பூவே பூவே புதையுண்டு போன
புன்னகையை விதை என்று
நினைத்து விடு அன்புக் கதை
கொண்டு நீர் இடு முளையிட்டு வளர்ந்திடுமே ...../
பூவே பூவே வாடாதிரு
பனி தொட்ட மலராய் மலந்திரு கனி பிறக்கும் காலம் வரும் காய்த்து கனிந்து விட்டால் பூவுக்கு அதுதானே வரம் ...../