ஆஹா அழகு

முல்லைப்பூ நறுமணம்
காற்றசைவில் முன்னே வர
கலைந்த மேகக் குடை பிடித்து
செவ்வெழில் பூந் தோட்டமொன்று
மெது மெதுவாய் அசைந்து
வந்து அருகே நின்றது
கடல் நுரை போல் கண்களில்
ஆவல் மின்ன அவளை
இமைக்காமல் நோக்கினேன்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (30-Jul-19, 11:41 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 323

மேலே