காவிரிபார் ஓர்முறை

பூவிரியும் நல்லெழில் மென்குளிர்த் தோட்டத்தில்
காவிரியாய், கார்முகில் பூங்கூந்த லாடவந்தாய்
பாவிரிந் தோடுது நெஞ்சத்தின் நாலறையில்
பார்நீ ஒருமுறைபோ தும் !

பூவிரியும் நல்லெழில் மென்குளிர்த் தோட்டத்தில்
காவிரியாய், கார்முகில் பூங்கூந்த லாடவந்தாய்
பாவிரிந் தோடுது நெஞ்சத்தின் நாலறையில்
காவிரிபார் ஓர்முறைபோ தும்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Jul-19, 9:04 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

மேலே