கட்டழகியே உன்மேல் கவிபுனைய

வைத்தேனடி உன்னை நான்
இடப்புற இதயத்தில் தைத்தேனடி
கைத்தளம் பற்றிடவே காதல் கொண்டேனடி
கார்மேகம் கூடும் போதெல்லாம்
கட்டியணைக்க துடித்தேனடி

கற்பனை மனதில் சொற்களைக் கொட்டுதடி
கட்டழகியே உன்மேல் கவிபுனையத் துடிக்குதடி
வி.ண்ணில் தோன்றிய செந்நிலவே
விழாக்கோலத்தை தருதடி உன் நினைப்பே
வெட்டிவேரே வேர் பலாவே

தடாகத்தில் பூத்த தங்க மலரே
தடையற்ற காதலால் தடுமாறுதடி நெஞ்சம்
தழைத்து செழித்த பவழக் கொடியே- மனதால்
அழைத்து அழைத்து அயர்ந்தேனடி பெண்ணே
அழகன் என்னை அணைக்க எப்போ வருவாயோ
- - - -நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (30-Jul-19, 8:53 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 174

மேலே