இமயத்தைச் சுற்றி யார் யார்

அகத்தி யர் எழுதிய பரிபூரணம் 1200 பாடல்க ளில்
பாடல்கள். இருபத்தொன் பது முதல் முப்பத்து நாலு வரை.

கலிவிருத்தம் வகை
ஆச்சப்பா சக்திசிவ மறிய வேண்டி யான்பட்ட பாடுகளைச் சற்றே கேளு
போச்சப்பா பேசுதற்கு பக்குவங்க ளில்லாப் பிராயமதில் பெரியோரைப் பணிவேன் மைந்தா
வீச்சப்பா வெகுகொடுமை துடியோ மெத்த வேனபடி திரிந்தலைந்தேன் வீணரோடே
மூச்சப்பா நின்றநிலை யறியவேண்டி மோகமதாய்க் கயிலாசம் வலம் வந்தேனே

வலமாக வரும்போது தென்புரத்தில் மகத்தான சித்தருட வழமை மெத்த
குலமான சித்த ரென்றால் பிர்மகுலமாகும் கூர்மையு் டனவர்களி டம் பேசவென்றால்
நலமான பக்குவங்க ளில்லை யில்லை நாழிகைக்கொர் நாழி கைதான் வேள்வி செய்து
பெலமான கால் தலைகள் வேறாய் நின்று பேசினார் சரிதை வழி பின்னின்றேனே

பின்னின்று மேல்புரத்திற் செல்லும்போது பிலமான சத்திரிய ரனந்தங் கோடி
கண்ணிறைந்த ஞானநெறி சற்றுமில்லை கருவான கிரிகையிலே கருவோ மெத்த்
முன்னின்று அவர்களுடன் பேசவேண்டி முழுமனதாய்ச் செல்கையிலே நீயாரென்றார்
வின்னிறைந்த காட்சிபெற்ற சூத்திரனான்றேன் வினையமுற்று பேசாமல் நின்றார் தானே

நின்றநிலை தானறிந்து வடபாகத்தில் நெடுந் தூரஞ் சென்று விளை யாடும்போது
கண்டதொரு இடங்களெல்லாம் யோகவாழ்க்கை கதிகொண்டு நின்றாரே வைசியர் தானும்
பண்டுடைய யோகமதில் திறமோ மெத்த பத்திகொண்டு அவர்களிடம் பருவ மாக
சென்றுமிகப் பூரணத் தின் வகையேதென்றென் திறந்தப்பாய் சொன்னதினால் திரும்பினேன்

திரும்பிமிக கீழ்த் திசையில் வரும்போதையா சிவசிவா சூத்திரரோ திறமோ மெத்த
விரும்பிமிக அவர்களிடம் செல்லும்போது வெகுகோடி சித்த்களிலே ஒருவர் தானும்
இரும்பதிலும் இலகாத மனமதாகி இருந்துசிவ யோகமது செய்தாரப்போ
கரும்பதிலு மினியசொல் லாகப்பேசி கண்டறிவோ மென்றுமெள்ள அடுத்தேன் பாரே

அடுத்துமிகப் பூரணத்துக் குறுதி கேட்டேன் அப்போது நீயரேன்றழுத் திப்பார்த்தார்
கடுத்தமன துறுதிகொண்டு சூத்திரனானென்றேன் கருவான என்மகனே வாவென்றார்
தொடுத்துமிக அவரிடத்தில நின்றேனடுத்து சுகமாக இரு மென்று அறிக்கையிட்டு
தடுத்து மிக ஆளடுமை கொண்டு யக்கியம் தான்வளர்த்தார் பூமிமுதலாகாச வரை க்கே

கும்பமுனியான விபரம்

வறைகண்டு யெக்கியந்தான் வளர்க்கும்போது மகத்தான தேய்வென்ற பூதந்தானும்
நிறைகின்ற பூரண மாங்க் கும்பம்கொண்டு நிலையாத அனலுக்குள் நின்றுதப்பா
துறையாக யிருந்தென்னை க்கண்ணால் மேவி சுபமாக வகத்தியமாய் வாவென்றார்கள்
குறையாத கும்பமடா பூரணத்தின் கும்பம் கொண்டுநின்ற வடிவதனைக். கூர்ந்து பார்

பாரென்று சொல்லியவர் பாய்ந்தாரப்போ பக்குவ மாய் யவர் முன்னே பாய்ந் தேனானும்
சீரென்ற கும்பமது பெண்ரூபமாகி சிவகுரு நாதனவ ராண் ரூபமா கி
நேரென்ற யிருவருக்கு நடுவாகி நின்றேன் நிலையாக அனலதுவை உண்டேன
நே ரென்ற மனந் தேறி யிருவரு மூவருமாய் சென்றுகரை யேறினபின் சிவாயகுருநாதன்

குருவான நாதனவன் மடிமீதில் வைத்து கும்பமுனி நீயெனவே. என்று முகந்தடவி
திருவான பூரணத்தை வாரிமி க்த்திரட்டி செம்மையுடன் தானீய் ந் தார்


விளக்கம்
அகத்தியர் உண்மையில் தானொரு சூத்திரன் என்றே சொல்கிறார். தான் இளம் வயதில்
வீணர் களுடன் திரிந்து சரியாக பக்குவம் அடையவில்லை என்கிறார். பிறகு கைலாய
கிரியை வளம் வந்தபோது தென்புலத்தார் பிர்ம குல சித்தர்களை சந்தித்தராம். அவர்கள் எப்போதும் யாகம்செய்து கொண்டிருந்தார் களேத்தவிர் இறைவனின் கால்தலையைபற்றி சரியாக புரிந்து கொள்ளவில்லை
கைலாயத்தில் மேற்கு புறத்தில் ஷத்தி ரிய சித்தர் அநேக இருந்தாராம் அவர்களிடம் கண்ணான ஞானநெரி யில்லை கிரியை மட்டும் பின்பற்றினார்கள் என்கிறார். பிறகு
கைலாய கிரியின் வடபாகத்தில் வைசிய சித்தர்களை சந்தித்தாராம் அவர்களோ பூரணம் பற்றிய உண்மையின் திறத்தை தவறாய் சொன்னார்களாம். பிறகே சூத்திரிகள் நிறைந்த கீழ் திசை வந்து சூத்திர முனியிடம் பூரணனான பரம்பொருளை கேட்க பூமி முதல் ஆகாய உயரமாய் கும்பத்தைபோல எக்கியம் வளர்த்தார். பின் அவர் அந்தத் தீயில் பாய்ந்தார் நானும் பாய்ந்தேன். அப்போது கும்பத்தீ பெண ரூபமாக வும் ஆண் ரூபமாக இரண்டாய் நிற்க அகத்தியர் நடுவே நின்றாராம். ஆண் பெண் வேறு யாருமல்ல அவர்கள் சிவசக்தியே
அவர்கள் தனக்குப் பூரணத்தை யள்ளித்தர நான் உண்டேன் என்கிறார்.

இதிலிருந்து நமக்குத் தெரிவது அகத்தியர் காலத்திலேயே பிரும்மகுலம், சத்திரியகுலம், வைசியகுலம் சூத்திரகு லமும் இருந்துள்ளது. ஆனால் சூத்திரர்களே பரம்பொருளை
அடைய சூட் சு மங்களை அறிந்திருந்தனர் எனப் புலப்படுகிறது. அகத்தியர் பரிபூரணம்
ஆயிரத்து இருநூற்றை வாங்கிப் படியுங்கள். திருவண்ணாமலை ஜில்லா செய்யாரைச் சேர்ந்த நா . தெ. சிகாமணி முதலியார் தகப்பனார் படித்த புத்தக மாம். இப்போது தாமரை
நூலகவத்தார் பதிப்புரிமை பெற்று வெளியிடு கிறார்கள்.

எழுதியவர் : பழனிராஜன் (30-Jul-19, 6:52 pm)
பார்வை : 80

சிறந்த கட்டுரைகள்

மேலே