ஒரு புல்லாங்குழலை வாசிக்கிறேன்

ஒரு மர நிழலில்
புல்லாங்குழலை எடுத்து வாசிக்கிறேன்
புல்வெளியும்
மேய்கின்ற ஆடும் மாடும் ஆடியன்ஸ்
கேட்பதற்கு ஒரு மனித ஆன்மாகூட இல்லை
அந்த வன வனாந்திரத்தில
இசையறியா
ஓரறிவுத் தாவரத்திற்கும்
ஐயறிவு விலங்குகளுக்குமா வாசிக்கிறாய் ?
இல்லை
எனக்காக மட்டுமே வாசிக்கிறேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (31-Jul-19, 8:44 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 118

மேலே