சண்டாளி
சண்டாளி
பூவும் போட்டும்
வேண்டும்ன்னு
நீயும்தான்
போயீபுட்ட
யாரு பெத்த
புள்ளயோனு என்னயாதான்
விட்டு புட்ட
நோயி பிணி
வந்துவிட்ட
ஐயோ!!! அந்த கொடுமைய
சொல்ல வேண்டா
நம்ம வச்ச
தென்னம்புள்ள
பாளை விடும்
நேரம் புள்ள
பிறந்த வீடு
வந்த பின்னும்
ஒத்தாசை பண்ண
யாருமில்ல
விளக்கேத்த
வந்த புள்ள
கஞ்சி தண்ணி
வைக்கையில்ல
வையும் சொல்லு
கொஞ்சமில்ல
ரோசம் வந்து
நிக்கையில்ல
இந்த
பாலும் வயிறு
கேட்பதில்லை
கல்யாண காட்சி வந்தா
ஊரு சனம்
கூடிடுது
நல்லது கெட்டது
பேசிக்குது
நம்ம கிராமத்து
நடுக்கல்லா
நானும் அங்க
நிக்கவில்லை
எண்ணுனு
கேட்க ஒரு
நாதியில்லை
எவ்வளவு
வருத்தம் வந்தாலும்
உன்
சேலையைத்தான்
போர்த்திக்கிறான்
என்
வேதனையத்தான்
தீர்த்துக்கிறான்
பூவும் போட்டும்
வேண்டும்ன்னு
நீயும்தான்
போயீபுட்ட
யாரு பெத்த
புள்ளயோனு என்னயாதான்
விட்டு புட்ட