ஆடி பிறந்தது
ஆடி வந்தது ஆடி ஓன்று - இன்று
ஆடிப் பிறப்பென்று பாடி ஆடிட
கூடி மகிழ்ந்திட கூழும் குடித்திட
ஆடி பிறந்தது ஆனந்தம் பொங்குது
தேடித்தேடியே கொழுக்கட்டை தின்னுவோம்
தேவ அமிர்தமாய் கூழும்
பருகுவோம்
ஏர்கள் பூட்டியே உழவும் தொடங்குவோம்
கார் காலம்பிறந்திட விதைகள் தூவுவோம்
தட்சணாயண காலம் இன்று
தொடங்குது
தமிழ் ஆண்டினில் பாதி
கடந்து போனது
தெற்கினில் ஆதவன் கால்கள் பதிந்தது
பசுமையும் குழுமையும் எம் வசமானது
- 17.07.2019 -