காதல் வானிலே
காதல் வானிலே🌹😘
மனம் அது மிதக்கிறது
உள்ளம் அது துடிக்கிறது
நெஞ்சம் அது நிறைகிறது
இதயம் அது இடம் மாறுகிறது.
காதல் கோட்டை கட்டுகிறது மனம்
உன்னை நினைத்து எப்போதும் உறுகுகிறது என் உள்ளம்
உன் செவ்விதழ் திறந்து நம் காதலை சொல்ல அதற்கு ஏங்கும் என் நெஞ்சம்
உன் பெயரையே எப்போதும் உச்சரிக்கும் என் இதயம்
காதல் வானிலே பறவை என சிறகடித்து மறப்போம் வா
என் கரம் பற்று
வென்மேக கூட்டத்தை கிழித்து ஏவுகனைப்போல் பறந்து அந்த வென்னிலவை அடைவோம் வா
அந்த ஒரு நட்சத்திரத்தை எடுத்து உனக்கு மூக்குத்தி செய்து தரவா
காதல் இளஞ்சோலையே
நீலவான நீச்சல் குளத்தில் நீந்தி பழக ஆசையா
காதல் பைங்கிளியே
அப்படி பார்க்காதே
உன்னை அள்ளி அனைத்து
என் மார்போடு சேர்ந்து
உன் கள் வடியும் இதழில்
என் இதழ்களால் கவிதை தீட்டி
காவியம் படைப்பேன்.
- பாலு.