காதல்

ஆழ்ந்த உன் மௌனத்தில் பெண்ணே
நான் பசிபிக் ஆழ்கடலின் அமைதி காண்கின்றேன்
அந்த ஆழ்கடலின் அமைதியும் உன் முகத்தில்
என்னை நீ காதலிக்க சம்மதமா என்று கேட்டேன்
நான் நேற்று, இதோ இன்று எனக்கு அதற்கு
பதிலும் கிடைத்துவிட்டது உன் மௌனத்தில்
உன் முகத்தில் பொதிந்த அமைதியில் உந்தன்
கண்கள் பேசும் புன் சிரிப்பில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Aug-19, 9:13 pm)
Tanglish : kaadhal
பார்வை : 248

மேலே