உலகம் - தற்போதைய நிலை

" காலணி ஆதிக்கத்தால் ஞாநிலமே நாலுபட்டு போச்சு.
மண்ணு திங்கிற உடம்பு, நெருப்பில் வெந்தாலும் ஆசை அடங்கவில்லை. நிலத்தின் மேல் மனிதன் ஆதிக்க வெறி அடங்கவில்லை. "

ஊருக்கு உரியோ, உரியோ என்று சத்தம்.
காரணம் யாரோ திருடன் புகுந்துவிட்டான்.
அதோ ஓடுகிறான்.
கையில் கம்புடன் பல ஆண்கள் கூடித் துரத்துகிறார்கள்.

விரட்டிப்பிடித்து தெரு முக்குச் சந்தியில் கட்டி வைத்து வெளுவெளுவென வெளுத்துவிட்டார்கள். இரத்தம் சொட்டத் தான் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டான்.
இது தான் எங்கள் ஊர்.

ஆனால் இன்னும் சில ஊர்கள் இருக்கின்றன.
பச்சிளங்குழந்தைக்குப் பாதுகாப்பில்லை.
பெண் என்றாலே பலத்காரம் செய்வது அந்த பெண்ணின் வயதைக் கூட கவனியாமல்.
வன்முறையாளர் களுக்கு அடைக்கலம் கொடுப்பது,
தீவீரவாதிகளை விருந்தாளிகளாக வைத்திருப்பது என்று எண்ணற்ற காரியங்களில் ஈடுபடுகின்றன.

ஆயுதங்களால் அமைதி கிடைக்குமென்று நீ நம்புகிறாயெனில் நீ மயான அமைதிக்கு உழைக்கப் போகிறாய்.

தலைவர்கள், பணம், அதிகாரம், அடிமைகள்.

அரசியல் தலைவர்களின் நோக்கம் அவரவர் பகுதி இன, மத, சாதி மக்களின் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும். அதற்காக பிற இன, மத, சாதி மக்களின் மீது வெறுப்பை உண்டாக்கி அந்த வெறுப்புத் தீயில் எண்ணெய் ஊற்றிக்கொண்டே இருப்பார்கள்.

அவர்களை நம்பும் அந்த இன, மத, சாதி மக்களிடம் எப்போதும் தம்மை நல்லவர்களாகவும் உயர்ந்த எண்ணம் கொண்டவர்களாகவும் கட்டிக் கொள்வார்கள்.
அதனால் அங்குள்ள மக்கள் அவர்களுக்கு அடிமைகளாகவே மாறிவிடுகிறார்கள்.

பணம்,

தனக்கு ஆதரவான கருத்தை பலரும் ஆதரிக்க வேண்டும்.
தான் நினைத்ததைச் செய்ய பணம் வேண்டும்.
ஊடுருவிய தீவிரவாதிகளை பாதுகாப்பதில் இருந்து ஆயுதங்கள் வாங்கி குவிப்பது வரை பணம் இல்லாமல் சாத்தியமில்லை.
அந்தகைய பணம் உலகின் பல குழுக்கள் நாடுகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்படுகின்றன.

அதிகாரம்,

அதே போல் தாங்கள் இருக்கும் பகுதியில் தங்கள் குற்றச் செயல்களை மறைத்து தங்களை நல்லவர்களைப் போல் காட்டுவதற்கு அதிகாரம் தம் பக்கம் இருந்தாக வேண்டும்.
அந்த அதிகாரம் அளவிலாத பணம் மற்றும் தம் பகுதி மக்களின் ஆதரவில் எளிதாக கிட்டுகிறது.

அடிமைகள்,

அரசன் என்றால் அடிமைகள் இல்லாமலா?
தந்திரமாக பேசி மனமாற்றப்பட்ட தீவிரவாத எண்ணம் மேலோங்கி பிற இன, மத, சாதியினரை அழிக்கத் துணியும் இளைஞர்கள் பலர் அந்த அடிமைக் கூட்டத்தில் இருப்பர்.

அந்த அடிமைகளைக் கண்டறிந்து களையெடுத்தால் மக்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற கூக்கல் சத்தமே எங்கும் எதிரொளிக்கும்.

ஒரு நாட்டு தன் நாட்டை பாதுகாக்க வேண்டி தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் அது மிகப்பெரிய சனநாயக படுகொலை என்று அந்நாட்டின் பல பகுதிகளில் இருந்து எதிர்ப்பு கிளம்புகிறது.
இது தான் அழிக்க முடியாத ஆலமரமாக தீவிரவாதம் உலகில் நிலைத்திருக்க காரணம்.

ஐக்கிய நாடுகள் சபை உலகின் பொது சபையாக அறியப்பட்டு வந்தாலும் அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள், பிரிட்டன், சீனா போன்ற நாடுகள் எடுக்கும் எந்த முடிவும் மற்ற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துகிறது.
ஆனால் அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள், சீனா, பிரிட்டன் போன்ற நாடுகளெல்லாம் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள்.
இப்படி ஐநாவில் ஏன் பாகுபாடுகள் உள்ளன என்று கேட்டால் அது உலக அரசியல் தீவிரவாதத்திற்குள் பயணிக்கிறது.

சமீபத்தில் கூட அமெரிக்க அதிபர் டிரம்ப் தாலிபான் தீவிரவாத அமைப்புக்கு பணம் கொடுக்க வேண்டுமென பேசியுள்ளதாக சேய்தி வந்திருக்கிறது.
அது ஒரு புறம் இருக்கட்டும்.

கொரியத் தீவுகளைப் பாருங்கள்.
வட கொரியா, தென் கொரியா என்று பிரிக்கப்பட்டுள்ள அவை உலகின் அடுத்த இந்தியா, பாகிஷ்தான் என்றே சொல்லலாம்.

இரு தினங்களுக்கு முன்பு கூட வட கொரியா ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டதாகவும் அதற்கான பணம் இணையத்தில் இருந்து திருடப்பட்டதாகவும் செய்தி வெளிவந்துள்ளது.
இணையத்தில் மில்லியன் கணக்கில் பணத்தை திருடுவது சாத்தியமா?
எதன் வழி, எதனிடம் இருந்து, எவ்வாறு திருடுவது சாத்தியமாயிற்று?

அப்போ இணையதளம் பாதுகாப்பு அற்றதாகத் தான் உள்ளதா?
இப்படி பல தரப்பட்ட கேள்விகளுக்கு மத்தியில் மில்லியன் கணக்கான பணத்தை வட கொரியாவிடம் பறிகொடுத்தது யார்?
என்ற கேள்வி எழுகிறது.

அரசாங்கம் புதிதாக ஒரு சட்டத்தை இயற்றினால் அந்த சட்டம் குறித்து எதிர்ப்பாக ஒரு கட்டுரை வெளி வருகிறது என்றால் அது எதிர்கட்சியின் பணத்தால் வாங்கப்பட்ட கட்டுரையாக இருக்கிறது.
ஆதரவாக உள்ளது எனில் ஆளும் கட்சி வெளியிட்டதாக இருக்கிறது.

ஆக எது கொண்டு வரப்பட்டாலும் நடைமுறை என்று ஒன்று உள்ளது.
கனவு கண்பது மிக எளிது.
ஆனால் அந்தக் கனவை நடைமுறையில் சாத்தியமாக்குவது மிக கடினமான செயல்.
அதற்காக நிறைய உழைக்க வேண்டும்.
அவ்வாறு உழைக்கத் தவறியதில் தான் உலகமே நாசமாகி கிடக்கு.

இந்த உலகில் பிறப்பால் அனைவரும் மனிதர்களாக இருந்தாலும்,
ஒரு மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு பாதுகாப்பு வேண்டிய நிலை உள்ளது. அதனால் தானே நாட்டுக்கு நாடு இராணுவம் அமைக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு பிரச்சனைக்கும் நிரந்தரம் தீர்வு இல்லாமல் போக யார் காரணம்.
வெறுப்புணர்வில் ஆழ்ந்து வாழும் மனிதர்களால் தான்.

ஒரு அரசியல் தலைவன் உடன்படிக்கை இடுவான்.
அடுத்து வந்தவன் அதை உடைப்பான்.
இப்படியே தொடரும் உலகில் அன்பு, பாசம், சகோதரத்துவம் எல்லாம் இல்லாமலானது என்றே தோன்றுகிறது.

ஒரு குடும்பத்திற்குள் அன்பு, பாசம், சகோதரத்துவம் மூன்றும் இல்லாது போகும் போது அந்த குடும்பம் சுக்குநூறாக உடைகிறது.
ஆளாளுக்கு நாட்டாமைதான். ஆளாளுக்கு ஒரு கொள்கை தான்.
ஆளாளுக்கு ஒரு கூட்டந்தான்.

உலகையே புரட்டி தலைகீழாக்கி வைத்துள்ளார்கள்.
இங்கு யாரையும் நம்ப முடியாது. நம்பவும் கூடாது.
நம்முடைய பாதுகாப்பு நம் கையில்.
நல்ல மனம் கொண்டவர்களுக்கு ஆண்டவன் அருள் செய்வான்.
மீண்டும் சந்திக்கலாம்.
நன்றி.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (17-Aug-19, 10:04 am)
பார்வை : 1568

சிறந்த கட்டுரைகள்

மேலே