மழைநீர் சேகரிப்பு பாடல்

மழைநீர் சேகரிப்பு [பாடல்]

நெஞ்சுருக வேண்டுகிறோம்
நஞ்ச உண்டு வாழுகிறோம்
தஞ்சமென சரணடைந்தோம்
தாயே உன்பாதந்தனை - நீ
காக்க வரவேணும் எங்க
கண்ணீர் துடைக்க வேணும்

மண்ணுமிங்கே செழிக்கலயே
மக்கசனம் சிரிக்கலையே - மாரி
ஆத்தா நீயில்லயே - நீ
காக்க வருவாயோ இல்ல
சாகவிடுவாயோ

வசனம் : எலே..எலே... தம்பி
என்னடா பண்றதெல்லாம் பண்ணிப்புட்டு
பசப்புற குத்தும்பண்ணது நாம
பழி மண்ணுமேலயும் மழிமேலேயும் போடுற
சேதிம் சொல்லறேன் கேளு
சொல்லுங்கண்ணே. .
குளம் குட்ட தான் மறச்சி
அடுக்கடுக்கா வீட்டைக்கட்டி
அறிவியலில் முன்னேறினோம் இப்போ
டிஜிட்டல் உலகில் திண்டாடுறோம்
பாடல்:
தொட்டியக்கட்டு . . தொட்டியக்கட்டு
மழைநீரு சேகரிப்பு தொட்டியக்கட்டு
மண்வளம் செழிக்கவும்
மக்க உசுர காக்கவும் காவா வெட்டு
ஆறுஏறி குளத்தயெல்லாம் தூருவாரு
தானா ஆனந்தத்தில் சிரிக்கும் இந்த ஊரு பாரு !
காட்ட நீயும் அழிக்காத
கேட்ட நீயும் வாங்காத
மேட்ட எல்லாம் வளைக்காத
உசுருக்கு வேட்ட நீயே வைக்காத
மழைநீரை காத்திட்டா
மண்ணின் வளம் செழிக்குமே
மனம் சந்தோசமா வாழுமே!
சிந்தனையுடன் மு. ஏழுமலை

எழுதியவர் : மு.ஏழுமலை (17-Aug-19, 1:43 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
பார்வை : 247

மேலே